கதகளியில் பாண்டிராஜின் புதிய யுக்தி

கதகளியில் பாண்டிராஜின் புதிய யுக்தி

விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கதகளி’. இப்படத்தை பசங்க பாண்டிராஜ் இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக மெட்ராஸ் புகழ் கேத்ரீன் தெரசா நடித்து வருகிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படம் பற்றிய ஒரு ரகசியம் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது, இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்காக 4 பாடல்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். அந்த 4 பாடல்களும் படத்தின் முதல் பாதியிலேயே இடம்பெற்று விடுமாம்.

இடைவேளைக்கு பிறகு படத்தில் எந்தவொரு பாடலும் இடம்பெறாதாம். காரணம், இடைவேளைக்கு பிறகு கதை மிகவும் விறுவிறுப்பாக செல்லுமாம். அந்த விறுவிறுப்புக்கு தடை போட்டுவிடக்கூடாது என்பதற்காக இடைவேளைக்கு பிறகு எந்த பாடலையும் வைக்கவில்லையாம்.