கேடி, அயன், படிக்காதவன், பையா, பாகுபலி உள்பட பல படங்களில் கவர்ச்சி கலந்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். வேங்கை, வீரம் படங்களில் குடும்பப்பாங்காக நடித்துள்ளார். என்றாலும் பெரும் பாலும் நகர்புறத்து நாகரீக நங்கையாகவே நடித்து இருக்கிறார்.
இப்போது, சீனுராமசாமி, இயக்கும் ‘தர்மதுரை’ படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் மதுரை பகுதி பெண்ணாக அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே சீனுராமசாமி இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் போன்று இதுவும் மண்வாசனையை சொல்லும் படம்.
‘தர்மதுரை’ படத்தில் டூயட் பாடாத கதாநாயகியாக தமன்னா வர இருக்கிறார். இதற்காக முழுமையான மதுரைப் பெண்ணாக மாறுகிறார்.
சமீபத்தில் தமன்னாவுக்கு மதுரை பகுதி கிராமத்து பெண்கள் அணிவது போன்று புடவை கட்டி வேடம் பொருத்தம் பார்க்கப்பட்டது. இதில் மதுரை பெண்ணாகவே அவர் மாறி இருந்ததை கண்டு இயக்குனர் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தார்கள். கண்ணாடியில் தன்னைப் பார்த்த தமன்னாவும் இது நானா என்று ஆச்சர்யப்பட்டார்.
தற்போது தர்மதுரை படப்பிடிப்பு தேனி பகுதியில் நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதியுடன் ராதிகா நடித்து வருகிறார். அடுத்த வாரம் முதல் தமன்னா நடிக்க இருக்கிறார்.