மிஸ் பண்ணிறாதிங்க பாஸ் அப்றோ FEEL பண்ணுவிங்க

கல்யாணம் ஆனா சிறிது நாளில் மனைவி கணவனை கைக்குள் போட்டுக்கொள்வது எப்படி என்று பெண்கள் பாட்டிமார்களை கேட்டு தெருஞ்சுகிட்ட காலமெல்ல மலையேறி போயி,  கணவன்மார்கள் மனைவியை எப்படி கைக்குள் போட்டுகலன்னு கூகுள்ல search பண்ற காலம் இப்போ வந்துருச்சு.

மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும் என நெனச்சு கூகுள்ல search பண்ணி சோர்ந்து போன பாவப்பட்ட கணவன்மார்களுகாக இந்த டிப்ஸ்…

மனைவி முன்பே எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்!

காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க. லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.

எல்லா குடும்ப குத்து விளக்கும் போட்டு வச்சுருக மாதிரி உங்க வீட்டு குத்து விளக்கும் பெட் மேலே துவைத்த துணி, பெட்ஷீட்ன்னு ஒரு மலையே போட்டு வச்சுருப்பாங்க. கோவப்படாம தூங்கப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுங்க.

மதியம் சாப்பிட்டது, ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.

குண்டா இருக்கற மனைவியை நக்கல் பண்ணாம எந்த கணவராலையும் இருக்க  முடியாது. அப்படியில்லாமல் ‘இந்த சேலையில நீ குண்டாவே தெரியலியே’, ‘அந்த காம்பாக்ட் பவுடர் போட்ட கண் கருவளையம் தெரியவே இல்லை’ இப்படிச் சொல்லணும்!

ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..

வீட்டு நாயைப் புடிச்சு தண்ணி ஊத்தி குளிப்பாட்டிவிடுங்க. அம்மிணி வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க.

வீட்டில் ஆணி அடிக்கணுமான்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.

அடுப்படி சாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி, காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் அத மாதிரி அயிட்டங்களை லிஸ்டல எழுதிக்கங்க.

ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான்

எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு இரண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் ட்ரில் எடுங்க.

குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்.

வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க. நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.

வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி  கார் கதவைத்திறந்து விடனும். ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும்.

அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும், முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேட்டஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும்.

மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..

மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து ‘இப்ப என்ன சொன்னே’ன்னு அசால்டா கேட்கக்கூடாது.

முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.

வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு ‘உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க. பாதிநாள் ‘செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும். இருத்தாலும் உங்க மனைவியை மடக்கனும்ன வேற வழி இல்ல பாஸ்…