கணவனை முந்தானையில் முடிந்து கொள்வது எப்படி..?

புதியதாக திருமணம் செய்து புகுந்த வீட்டிற்கு செல்லலும் ஒவ்வொரு பெண்ணிடமும் பிறந்த வீட்டில் இருந்து சொல்லி அனுப்பும் ஒரு விஷயம் “புருஷனை முந்தானையிலேயே முடுஞ்சு வச்சுக்கோ”. இதைதான் ஒவ்வொரு பெண்களிடமும் பிறந்த வீட்டில் இருந்து சொல்லி அனுப்புகின்றனர்.

அப்படி கணவனை முந்தானையில் முடிந்து வைக்க, பெண்கள் செய்ய வேண்டியவை :

த‌னது கணவனுக்கு தான் எப்ப‍டி நடந்துகொள்ள‍ வேண்டும், எப்ப‍டி நடந்தால் தன்னை தனது கணவன் நேசிப்பான் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அதன் படி கணவனுக்குப் பிடித்த‍த மனைவி செய்து, அவனது மனதில் நீங்கா இடம்பிடிக்க வேண்டும்.

அப்போது தான் அவனது மனதில் ஆஹா, தனக்காக அவளையே மாற்றிக்கொண்டு வாழ்கிறாளே! என்று உங்கள் மீது ஒரு மதிப்புத் தோன்றும்… அந்த மதிப்பு நாளடைவில் மரியாதையாக மாறி உங்களது வார்த்தைகளுக்கு கட்டுப்படுவார்.

உங்களுடன் வண்டியில் போகும் போது உங்களுக்குத் தெரிந்தே மற்ற பெண்களை சைட் அடித்தாலோ, உங்களுக்குத் தெரியாமல் தனது வண்டியில் பெண்களுக்கு லிஃப்ட் தந்தாலோ.. அதையெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள். மன்னித்து, மறந்துவிடுங்கள்.

ஏதேனும் முக்கியமான பிரச்சனை குறித்து விவாதித்துக்கொண்டிருக்கும் போது பேச்சு சண்டையில் முடியும் போலத் தெரிந்தால் சட்டென்று பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது வேறு விஷயத்திற்குத் தாவி விடுங்கள்.

உங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவற்றையெல்லாம் பெட்ரூமுக்கு உள்ளே வர அனுமதிக்காதீர்கள்.

உங்கள் உடல், மனநிலைக்கேற்ப அடிக்கடி உறவில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அவரது அம்மாவை கொஞ்சம் நேசியுங்கள். அவர் உங்களைத் தலையில் வைத்துக்கொண்டாட ஆரம்பித்து விடுவார்.

உங்களை எங்கேயாவது அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தவறி விடுகிறாரா? ஆளைப்பார்த்தும் ஆத்திரமாகக் கத்தாதீர்கள்.

ஏமாற்றத்தை வார்த்தைகளிலோ, முகத்திலோ காட்டிக்கொள்ளாதீர்கள். அவரது செயல் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்கிறபடி உங்கள் நடவடிக்கை இருக்கட்டும். அவர் தானாக வழிக்கு வருவார். அடுத்தமுறை அதே தவறைச் செய்யத் தயங்குவார். அவரது நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமு ம் நன்றாகப் பேசிப் பழகுங்கள்.

யார் மீதாவது உங்களுக்கு வெறுப்பு இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதீர்கள். உங்களவருக்கு நெருங்கிய நண்பர்களாவோ, உறவினர்களாகவோ இருந்தாலும் கூட மூன்றாம் நபருக்கு எதிரில் அவரை விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள். எக்காரணம் கொண்டும் உங்களவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். இந்த விஷயத்தில் பெரும்பாலான ஆண்களுக்குப் பரந்த மனப்பான்மை கிடையாது.