பெண்கள் கால்களை ஷேவிங் செய்யும் போது செய்யும் தவறுகள்

நீங்கள் எத்தனை முறை உங்கள் கால்களை ஷேவ் செய்வீர்கள்? மாதத்திற்கு இருமுறை அல்லது அதற்கு மேல்? ஒருவேளை நீங்கள் மாதத்தில் இருமுறைக்கு மேல் ஷேவ் செய்வீர்கள் என்றால் அதில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம். இது இரண்டு காரணங்களால் இருக்கலாம். அதில் ஒன்று அதிகப்படியான முடி வளர்ச்சி, இரண்டு நீங்கள் ஷேவ் செய்யும் போது செய்யும் தவறாக கூட இருக்கலாம்.

பெரும்பாலான நேரங்களில் அது இரண்டாவதாகச் சொல்லப்பட்ட காரணமாக இருக்கலாம். ஒரு அழகுக்கலை வல்லுனரின் கருத்துப்படி பெரும்பாலான பெண்கள் தங்கள் கால்களை ஷேவ் செய்யும் போது நிறைய தவறுகளைச் செய்கின்றனர். எனவே Tamilcnn உங்களுக்காக ஷேவ் செய்யும் போது நிகழும் இந்த தவறுகள் என்னவாக இருக்கலாம் என சில குறிப்புகளை இங்கே தருகிறோம்.

ஒரு பெண்ணாக அனைவருக்கும் முடிகளற்ற குறைகளற்ற அழகான கால்கள் இருப்பதையே விரும்புவோம். அதனால் நாம் ஷேவ் செய்யும் போது செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து அதனைத் தவிர்க்கலாமே? இந்த தவறுகளை தவிர்ப்பதால் உங்கள் முடி வளர்ச்சியைக் குறைத்து சருமத்தை நன்கு பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குளிப்பதற்கு முன்
குளிப்பதற்கு முன் சருமம் கடினமாகவும் வறண்டும் இருப்பதால் ஷேவ் செய்வதை தவிர்க்க வேண்டும். முதலில் சருமத்தை நன்கு நனைத்துவிட்டு அதன் பிறகு முடியை நீக்க முயல வேண்டும். இது பெண்கள் கால்களை ஷேவ் செய்யும் போது பொதுவாகச் செய்யும் தவறு.
30-1446190380-1-shower

சருமச் சுத்தம்
உங்கள் கால் சருமத்தை ஷேவ் செய்யும் முன் சுத்தம் செய்வது அவசியம். இதனால் வறண்ட மற்றும் இறந்த தோல் பகுதிகள் நீக்கப்பட்டு சரும எரிச்சலும் குறைக்கப்படும்.
30-1446190386-2-legs

எதை உபயோகிக்கிறீர்கள்?
சோப்பு உங்கள் சருமத்தை வறட்சியாகவும், அரிப்புடையதாகவும் செய்யும். எனவே சோப்பிற்கு பதிலாக ஷேவிங் கிரீம்களை உபயோகிப்பது அரிப்பைக் குறைத்து நல்ல பலன் தரும்.
30-1446190392-3-soap

ஐயோ, பழைய ரேசரா?
பெண்கள் தங்கள் கால்களை ஷேவ் செய்யும் போது செய்யும் ஒரு பொதுவான விஷயம் பழைய ரேசரை உபயோகிப்பது. ரேசர்கள் காலப் போக்கில் மழுங்கிவிடுவதுடன் நெருக்கமான சேவை தருவதில்லை. மாறாக அவை சரும எரிச்சலையும் தரும் என்பதால் அவற்றை முதலில் தூக்கி எறியுங்கள்.
30-1446190398-4-razor

அழுத்தம் தராதீர்கள்
உங்கள் சருமத்தை காயப்படாமல் பாதுகாப்பது அவசியம். ஷேவ் செய்யும் போது அழுத்தி செய்தால், அது அதிகமான இறந்த தோல் செல்களை எடுப்பதோடு அவை ரேசரில் சிக்கி உராய்வை அதிகரித்து உங்கள் கால்களில் காயத்தை உண்டு பண்ணக்கூடும்.
30-1446190403-5-woman-shaving

தவறான கோணத்தில் ஷேவ் செய்வது
ஷேவ் செய்ய உகந்த வழி உங்கள் முடி வளரும் பாங்கில் ஷேவ் செய்வது. அதாவது உங்கள் காலின் கீழ் பகுதியில் இருந்து துவங்கி மேல் நோக்கி செய்ய வேண்டும். இதனால் உங்கள் முடி வளர்ச்சி குறைவதுடன் மிருதுவான சருமமும் கிடைக்கும்.
shaving-your-legs

ஒரு ரேசர், பல பேர்
வேண்டாங்கஉங்க ரேசரை இன்னொருத்தருக்குக் கொடுக்காதீங்க.. இல்ல அவங்களோடதை நீங்க உபயோகிக்காதீங்க… இது பல பெண்கள் செய்கிற தவறு. ஏனென்றால் இதில் பல நோய்த்தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் குடிகொண்டிருக்கும்.
taking-care-of-her-legs-after-bath

ஷேவிங்கிற்குப் பிறகு கிரீம்
ஷேவிங் செய்வதால் உங்கள் சருமம் வறட்சி அடையும். எனவே ஒரு மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பது நல்லது. இது எரிச்சல் மற்றும் சரும வறட்சியைத் தடுக்கும். என்ன சரியா? இனிமேல் கவனமாக ஷேவ்விங் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
30-1446190409-6-legs