பூமிபோன்ற புதிய பாறைகிரகம் கண்டுபிடிப்பு

புதிய பூமி போன்று வேற்று ஜீவராசிகள் வாழ தகுதியுடைய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கபட்டு உள்ளது. நமது சூரிய குடும்பத்திற்கு உள்ள மற்ற பாறை கிரகங்களை விட 3 மடங்கு நெருக்கம் உள்ள கிரகமாகும் இது.

இந்த வேற்றுலக கிரகத்திற்கு கவர்ச்சியான பெயர் ஜிஜெ1132பி என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த கிரகம பூமியை விட 16 சதவீதம் பெரியது.சிலியில் உள்ள அமெரிக்க வானியல் ஆய்வகத்தில் உள 8 தொலை நோக்கி மூலம் மே மாதம் கண்டறிய பட்டது

10 அங்குல தொலை நோக்கியை பயன்படுத்தி இந்த கிரகம் கண்டறியபட்டு உள்ளது.ஏற்கனவே விண்வெளி விஞ்ஞானிகள் வளி மண்டலத்தில் கண்காணிக்க நம்பகமான ஹப்பிள் தொலை நோக்கியை பயன்படுத்தி காற்றின் வேகம் அதன் அஸ்தமனம் மற்றும் நிறங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர் டிரேக் டெமிங் கூறும் போது:-

சூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டறியபட்ட கிரகங்களில் இது மிகவும் முக்கியமானது.ஜிஜெ1132பி கிரகம் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதாவது 229,266,396,108,688 மைல் தொலைவு ஆகும்.தெற்கு வானத்தில். வேலா விண்மீன் தொகுப்பில் இது உள்ளது.
இந்த கிரகத்தின் வெளி நோக்கு சுற்றுவட்டபாதை நமது சூரியனின் 5ல் ஒரு பாகமாக இருக்கும். அதன் நெருக்கமான மேற்பரப்பு வெப்பநிலை 260C ஆக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

இந்த கிரகம் வேற்று கிரகவாசிகள் வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

விஞ்ஞானிகள் புதிய “பூமியின் 2” வேற்று கிரக வாசிகளின் வாழ்க்கை தேடுவதற்கு இது உதவியாக இருக்கும் என நம்புகிறார்கள்.