ஆர்யாவுடன் மோதும் ஜெயம் ரவி

ஆர்யாவுடன் மோதும் ஜெயம் ரவி

‘ரோமியோ ஜூலியட்’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி தற்போது நடித்துள்ள படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கியிருக்கிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆதி இசையமைத்துள்ளார்.விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தின் பாடல்களை ஜூலை 22ம் தேதி வெளியிட உள்ளனர். படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிட இருக்கின்றனர்.

அன்றைய தினத்தில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படம் வெளியாக இருக்கிறது. இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.