படப்பிடிப்பில் ஸ்ருதிக்கு போட்டோஷுட் நடத்திய அஜித்

படப்பிடிப்பில் ஸ்ருதிக்கு போட்டோஷுட் நடத்திய அஜித்

அஜித், ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாது, ஒரு சிறந்த புகைப்பட கலைஞரும்கூட. படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பல்வேறு இயற்கை சூழ்நிலைகளை படம்பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர். அதுமட்டுமில்லாமல், படப்பிடிப்பிலும் தனக்கு பிடித்தமான காட்சிகளை தனது கேமராவில் படம் பிடித்து வைப்பார்.இந்நிலையில், சமீபத்தில் அப்புக்குட்டியை வைத்து ஒரு மிகப்பெரிய போட்டோ ஷுட் நடத்தினார். அஜித் முதன்முறையாக எடுத்த அந்த போட்டோ ஷுட்டில் அப்புக்குட்டியை வெவ்வேறு கெட்டப்புகளில் படம்பிடித்து, அவரை மிகவும் அழகாக காண்பித்திருந்தார்.

அப்புக்குட்டியை வைத்து அஜித் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து தற்போது, இவர் நடித்துவரும் ‘சிறுத்தை’ சிவா படத்திலும் அஜித் ஒரு புகைப்பட கலைஞராக மாறியுள்ளார்.

சமீபத்தில் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பின்போது, அஜித் நடிகை ஸ்ருதிஹாசனை வைத்து படப்பிடிப்பிலேயே ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். ஸ்ருதிஹாசனை வெவ்வேறு கோணங்களில் அஜித் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஜித், எடுக்கும் புகைப்படங்களைவிட, அவர் புகைப்படம் எடுக்கும் அழகையே அனைவரும் வியந்து பார்க்கின்றனர்.