மிஷன் இம்பாசிபிள் 5: உயிரை பணயம் வைத்து விமானத்தில் தொங்கியபடி நடித்த டாம் குரூஸ் – வீடியோ

மிஷன் இம்பாசிபிள் 5: உயிரை பணயம் வைத்து விமானத்தில் தொங்கியபடி நடித்த டாம் குரூஸ் - வீடியோ

விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘மிஷன் இம்பாசிபிள் 5’ என்ற ஹாலிவுட் படத்திற்காக மரணத்தை பரிசளிக்கக்கூடிய காட்சியில் விமானத்திலிருந்து தொங்கியபடி நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் டாம் குரூஸ்.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் டாம் குரூஸ் விமானத்தில் தொங்கியபடி பறப்பதற்கு தயாராகும் காட்சிகளும், அது பற்றி சண்டைப் பயிற்சி கலைஞர்கள் அளித்த பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவின் இறுதியில் மிக சிரமத்திற்கு இடையில் டாம் குரூஸ் விமானத்தில் தொங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதுவரை வந்துள்ள மிஷன் இம்பாசிபிள் படங்களின் 4 பாகங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் வரும் ஜூலை 31 அன்று வெளிவரும் இதன் 5-ம் பாகத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.