பேய் பீதி.. ஸ்பெயினில் அடிமாட்டு விலைக்கு ஏலம் கேட்கப்பட்ட விமான நிலையம்!

ஸ்பெயினில் பேய் நடமாட்டம் உள்ளதாகக் கருதப்படும் விமான நிலையம் மிகக் குறைந்த விலைக்கு ஏலம் கேட்கப் பட்டுள்ளது. ஸ்பெயி்ன் நாட்டில் உள்ள மேட்ரிட்டில் கடந்த 2008ம் ஆண்டும் ஒரு பில்லியன் யூரோ செலவில் மத்திய விமான நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இந்த விமான நிலையம் அதிகம் பயணிகளை ஈர்க்கவில்லை. எனவே, கடந்த 2012ம் ஆண்டு இந்த முனையம் மூடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத இந்த விமான நிலையத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், பகல் நேரங்களில் கூட இந்த விமான நிலையம் பக்கம் செல்ல மக்கள் அஞ்சத் தொடங்கினர். இதனால், இந்த விமான நிலையத்தை விற்பனை செய்ய முடிவெடுக்கப் பட்டது.

அதன்படி, 28 மில்லியன் யூரோ தொடக்க விலையாக நிர்ணயிக்கப் பட்டது. ஆனால், அவ்வளவு பணம் கொடுத்து இந்த விமான நிலையத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இறுதியாக வெறும் 6 ஆயிரத்து 900 யூரோக்களுக்கு மட்டுமே இந்த விமான நிலையம் விலை கோரப்பட்டது. இதனையடுத்து ஏலம் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் யூரோ செலவில் உருவான இந்த விமான நிலையம் வெறும் 6 ஆயிரத்து 900 யூரோக்களுக்கு மட்டுமே விலை கேட்கப் பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19-1437292738-spain-airport45451-600

19-1437292747-spain-airport4545-600-jpg

19-1437292755-spain-airport-600-jpg