உலக வரலாற்றில் பெரும் புரட்சியும், அழியா தடமும் பதித்த சாதனை மனிதர்கள்!!!

பிறக்கும் போதே அனைவரும் பணக்காரனாகவோ, புத்திசாலியாகவோ பிறப்பது அல்ல. ஆனால், அள்ள அள்ள குறையாத செல்வமுள்ள இந்த பூமியில் இறக்கும் போதும் ஏழையாக, அறிவும், பண்பும் வளர்த்துக்கொள்ளாமல், அறிவிலியாக இறப்பது நாமே நமக்கு செய்துக்கொள்ளும் துரோகம்.

நாம் இப்போது இப்படி மிக வசதியாக, உடல் வேலை குறைவாக செய்துக்கொண்டு ஸ்மார்ட் போன்களில் உலகை சுற்றி வர, சுதந்திரமாக, தனி மனித உரிமையோடு வாழ எவ்வளவோ பேர் தானது உயிரை தியாகம் செய்து, அழியா புகழ் அடைந்துள்ளனர்.

அவர்கள் சென்ற பாதையும், தளமும் கரடுமுரடாக இருந்தாலும், அதில் அழியாத வண்ணம் தங்களது தடத்தை பதித்து சென்றவர்கள் அவர்கள். வரலாற்றில் நாம் மறக்க கூடாத சில உலக அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றி ஓர் சிறிய நினைவு கூறும் கட்டுரை தான் இது…,

வில்லியம் ஷேக்ஸ்பியர்
william_shakespeareதனது சிறப்பான இலக்கிய ஞாலத்தினால், அழியாத கவிதைகளும், காவியங்களும் படைத்து சென்றவர் வில்லியம் ஷேக்ஸ்பியர். இன்றளவும், ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமானால், இவரது துணையின்றி இயலாது என்று தான் கூற வேண்டும். ஏன் நம்ம ஊர் பாட புத்தகத்தில் கூட எவ்வளவு வில்லியம் ஷேக்ஸ்பியர் பாடல்களையும், கதைகளையும் படித்து தானே நாம் வளர்ந்திருக்கிறோம்.

ஸ்டீவ் ஜாப்ஸ்
Steve_Jobs_Headshot_2010-CROP
ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர், இவரது எண்ணமும், உழைப்பும் தான் இன்றைய ஸ்மார்ட் போன் உலகின் அச்சாணி. இன்று நாம் உலகம் மொத்தத்தையும் உள்ளங்கையிலேயே சுற்றி பார்க்கிறோம் எனில், அது இவரது அயராத உழைப்பினால் தான்.

பிளாடோ (Plato)
plato-head-shotதத்துவ ஞானி சாக்ரட்டீஸின் முதன்மை சீடர் பிளாடோ. எண்ணற்ற தத்துவங்களும், வரலாறு, கலை, மனிதம், குடும்பம், ஆன்மிகம் பற்றி எல்லாம் எடுத்துரைத்தவர்.

லியோனார்டோ டா வின்சி
Leonardo-Da-Vinci
உலக அளவில் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தலை சிறந்த ஓவியர் லியோனார்டோ டா வின்சி. இவர் வரைந்த பல ஓவியங்கள் “மாஸ்டர் பீஸ்” என்று புகழாராம் சேர்க்கப்பட்டது. இன்று இவ்வளவு தொழில்நுட்ப வசதிகளில் செய்யப்படும் கலைநயத்தை, இவர் அப்போதே செய்துவிட்டார்.

நிகோலா டெஸ்லா (Nikola Tesla)
nikola-tesla
இன்றைய மாடர்ன் தொழில்நுட்பத்திற்கு இவர் ஓர் முன்னோடி, இப்போது நாம் போகுமிடமெல்லாம் உபயோகப்படுத்தும் “Wi-Fi”க்கு இவரை தந்தை என்று கூட குறிப்பிடலாம். மற்றும் ப்ரீ எனர்ஜி எனப்படும் இவரது கோட்பாடு மிகவும் பிரபலமானது.

அரிஸ்டாட்டில்
Aristotleசாக்ரட்டீஸ், பிளாடோவை தொடர்ந்து இவர்களது சீடனாய் வந்தவர் அரிஸ்டாட்டில். பெரும் ஞானம் கொண்டவர். மேற்கத்திய கொள்கைகள் மற்றும் வழிகளை மாற்றி அமைத்ததில் பெரும் பங்கு வகிப்பவர் அரிஸ்டாட்டில். இவரது தத்துவங்கள் அனைத்தும் இவரது புகழுக்கு பறைசாற்றும்.

கிளியோபாட்ரா
cleopatra-liz-taylor-580பெண் சக்திக்கு வரலாற்று சான்றாய் விளங்குபவள் கிளியோபாட்ரா. ஆணாதிக்கம் நிறைந்திருந்த போதே, தனது மேலாண்மை திறன் மற்றும் ஆட்சி செயல்திறன் கொண்டு நாட்டை ஆண்டவள். அழகுக்கு மாட்டுமே கிளியோபாட்ராவை உவமையாக எடுத்துரைப்பவர்கள், வீரத்திற்கும் இவள் பெயர்போனவள் என்று மறந்துவிட கூடாது.

அலெக்சாண்டர்
AlexanderTheGreat_Bust

அலெக்சாண்டர், மாவீரன், மாமன்னன். உலகையே வென்று, தன் காலுக்கு கீழே ஆட்சி புரிவேன் என்று சொன்னது போல ஆட்சியையும் செய்து காட்டிய ஆண்மகன். வெற்றியின் தத்து பிள்ளை. தான் இறந்த பிறகு, தனது கைகளை சவப்பெட்டிக்கு வெளியே தொங்கும் படி செய்ய கூறினார், ஏனெனில் அப்போது தான் தனது மக்களுக்கு, உலகையே ஆண்டாலும் கூட, மரணமடைந்த பிறகு நாம் வெறும் கையுடன் தான் செல்ல வேண்டும் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்று எண்ணினார் அலெக்சாண்டர்.