பூமியில் விழுந்த தேவதை!

சில வாரங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பறக்கும் மனிதர்கள் வானத்துல வட்டம் இடுறதா வெளியான பரபரப்பு வீடியோ, வைரல் ஆனது தெரிஞ்ச விஷயம்தான். அதே மாதிரி லண்டனில் நடந்திருக்கு ஒரு சம்பவம்.

வெள்ளை வெளேர் உடையும், சுருக்கம் விழுந்த முகமும் கொண்ட வயதான (?!) ஒரு பறக்கும் தேவதை பொத்துனு லண்டன் தெருவுல இருந்த ஒரு கூண்டுக்குள்ள விழுந்திருக்கு. அவ்வளவுதான். பதறியடிச்சுப் பல பேர் ஓட, ‘என்னம்மா அங்க சத்தம்?’னு கெத்தா சில பேர் பக்கத்துல போய்ப் பார்த்திருக்காங்க. அட, நிஜமாவே ஒரு பறக்கும் தேவதை ஸாரி… மூத்த தேவதை. அவ்ளோதான். ஆளாளுக்குப் போட்டி போட்டு போட்டோ எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், லண்டனில் இருக்கும் சில பூம் பூம் பூச்சாண்டிகள், ‘போச்சு போச்சு… மனித இனம் பூமியில் வாழும் தகுதியை இழந்துவிட்டது. அதுக்கான அறிகுறிதான் இது’ என கேப்பில் கிடா வெட்டியிருக்கிறார்கள்.

கடைசியில்தான் தெரிந்தது சீனாவைச் சேர்ந்த சன் யுவாங், பெங் யூ என்ற இருவர் சேர்ந்து வடிவமைத்த செயற்கையான உருவம்தான் அது என்று. ‘கலைக்கும் இயற்கைக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை’ என்பதை உணர்த்த பல ஆண்டுகளாக இவர்கள் உழைத்து உருவாக்கியது தான் இந்த வயதான தேவதையாம். எலும்பு, தசை, ரத்தத்துக்குப் பதில் சிலிக்கான் பசை, ஃபைபர் கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கி யிருப்பது மட்டும்தான் இந்த தேவதைக்கும், சாதாரண மனுஷிக்குமான வித்தியாசம்.

மற்றபடி, உடலமைப்பு, தத்ரூபமான முடிகள், அத்தனை கச்சிதமாகக் காணப்படும் இறக்கைகள் என எல்லாமே ஆஸம். தங்கள் திறமையைக் காட்ட, அடிக்கடி பல நாடுகளுக்கு டிரிப் அடிக்கும் சன் யுவாங்கிற்கும், பெங் யூவிற்கும் புராணங்களில் கேள்விப்பட்ட வித்தி யாசமான உருவங்களை, அச்சு அசலாக செயற்கையில் கொண்டுவருவதுதான் ஹாபியாம்!

p6a (1)

p6b