ஈபிள் கோபுரத்தின் மேலேறி சாதித்த பிரித்தானிய இளைஞர்!- மயிர்கூச்செறியும் வீடியோ (Video)

உயரமான இடங்களில் பாதுகாப்பு உபகரணங்களின்றி ஏறுவதை தனது சாகசப் பொழுதுபோக்காகக் கொண்ட பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் பாரிசின் புகழ் பெற்ற ஈஃபில் கோபுரத்தில் இது போல ஏறியதை வீடியோப்பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

25 வயதான பிரிட்டிஷ் இளைஞர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் இந்த கோபுரத்தின் மீது கம்பிகளைப் பிடித்தவாறே ஏறியதை விடியோக் காட்சிகளாக்கியிருக்கிறார்.

இதற்கான அனுமதியை அவர் பெறவில்லை. பாதுகாப்புக் கருவிகளையும் அவர் வைத்திருக்கவில்லை.

யுட்யூபில் பிரசுரித்த இந்த வீடியோவில் அவர் எப்படி, தான் இந்த கோபரத்தில் இரவைக் கழித்தேன் என்பதையும், பாதுகாப்புக் காவலர்கள் கண்களில் மண்ணைத் தூவி எப்படி ஏறினேன் என்பதையும், பிறகு ஆறு மணிநேரங்களுக்குப் பின்னர் போலிசாரால் கைது செய்யப்பட்டதையும் விவரித்திருக்கிறார்.

இதே போல பல சாகசங்களை அவர் செய்து இணையத்தில் படமாக்கியிருக்கிறார்.

சதாம்ப்டன் நகரில் 2013ம் ஆண்டு ஒரு கிரேனிலிருந்து தொங்கி அதைப் படமெடுத்து அவர் பிரசுரித்த காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவியிருந்தன. இதே போல இந்த ஆண்டு முன்னதாக லண்டனில் வெம்ப்ளி விளையாட்டரங்கில் உள்ள வளைவில் அவர் ஏறியிருந்தார்.