தமனுக்காக ஒன்றிணைந்த சிம்பு-தனுஷ்

தமனுக்காக ஒன்றிணைந்த சிம்பு-தனுஷ்

தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்களில் எஸ்.எஸ்.தமனும் ஒருவர். இவர் தெலுங்கில் தற்போது சாய் தரண் தேஜ்- மன்னா சோப்ரா நடிப்பில் உருவாகும் ‘திக்கா’ படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் பாடல்களை ஹிட்டாக்க தமன் மிகவும் மெனக்கெட்டு வருகிறார். சமீபத்தில் ‘திக்கா’வில் இடம்பெற்ற ‘பேபி திக்கா’ என்ற பாடலை தனுஷ் பாடியிருந்தார். இந்நிலையில் ‘திக்கா’வில் இடம்பெறும் ‘ஹோட் ஷோ தேரோ’ என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். தமனுக்காக சிம்பு-தனுஷ் இருவரும் ஒன்றிணைந்து பாடியிருப்பதால் இப்படத்தின் பாடல்களை டோலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். சிம்பு தற்போது ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படப்பிடிப்பிலும், தனுஷ் வெற்றிமாறனின் ‘வடசென்னை’யிலும் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post தமனுக்காக ஒன்றிணைந்த சிம்பு-தனுஷ் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
தமனுக்காக ஒன்றிணைந்த சிம்பு-தனுஷ்