எமனுக்காக மும்பை சென்ற விஜய் ஆண்டனி

எமனுக்காக மும்பை சென்ற விஜய் ஆண்டனி

இசை அமைப்பாளராக அறிமுகமாகி முக்கிய ஹீரோவாக உயர்ந்து இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த ‘நான்’, ‘சலீம்‘, ‘இந்தியா– பாகிஸ்தான்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான இவரது ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து விஜய் ஆண்டனி தற்போது ‘எமன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருக்கிறார் விஜய் ஆண்டனி. மும்பையில் பாடல் காட்சி ஒன்றை படமாக்க இருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தியாகராஜன் நடித்து வருகிறார். ஜீவா சங்கர் இயக்கி வரும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசை அமைத்து வருகிறார்.

The post எமனுக்காக மும்பை சென்ற விஜய் ஆண்டனி appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

எமனுக்காக மும்பை சென்ற விஜய் ஆண்டனி