நீதிபதிகளால் வழங்கப்பட்ட சில விசித்திரமான தண்டனைகளும் அவற்றிற்கான காரணங்களும்!

எந்த தவறு செய்தாலும் அதற்கான தண்டனையை நாம் பெற்று தான் ஆக வேண்டும். தவறு அல்லது குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு தண்டனை வழங்குவது தான் நீதிமன்றத்தின் வேலை. சில தருணங்களில் குற்றவாளியை திருத்துகிறோம், அல்லது அவர்களது வயதை நோக்கத்தில் கொண்டு தீர்ப்புகளை சற்று வினோதமாக கூறுவது உண்டு.

அந்த வகையில் சில தவறுகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுப்பட சில நபர்களுக்கு நீதிபதிகள் வழங்கிய விசித்திரமான தீர்ப்புகளும், அவர்கள் செய்த குற்ற சம்பவங்களும் குறித்து தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.

கழுதையுடன் ஊரைச்சுற்றிவர வேண்டும்
ஜெஸிக்கா லோங் மற்றும் பிரைன் பத்ரிக்ஸ் எனும் 19 வயது நிரம்பிய அமெரிக்க இளைஞர்களுக்கு தான் இந்த கழுதையுடன் சுற்றி வர வேண்டும் என்ற விசித்திர தண்டனை வழங்கப்பட்டது. அந்த கழுதையின் கழுத்தில் மன்னிக்க வேண்டும் என்ற வாசக அட்டையும் தொங்கவிடப்பட்டிருந்தது.
02-1449025153-someweirdpunishmentsgivenbyjustice1 (1)

காரணம் கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்காவின் பெயின்ஸ்வின் நகர நீதிபதி தான் இந்த தண்டனையை வழங்கினார். இந்த இரண்டு இளைஞர்களும் அந்த ஊரில் இருந்த ஒரு தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலையை திருடியதற்கே இந்த தண்டனை வழங்கப்பட்டது.
02-1449025159-someweirdpunishmentsgivenbyjustice2

வேலை தேட வேண்டும்
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 25வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தனக்கு பெற்றோர்கள் மாதாமாதம் 400 யூரோக்கள் பணம் தர வேண்டும். அவர்கள் தருவதில்லை என பெற்றோர் மீதே வழக்கு தொடர்ந்தார்.
02-1449025164-someweirdpunishmentsgivenbyjustice3

தீர்ப்பு இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, உடனடியாக நீ வீட்டை விட்டு வெளியேற வேண்டும், வெளியேறிய 30 நாட்களுக்குள் உனக்கான வேலையை தேடிக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.
02-1449025169-someweirdpunishmentsgivenbyjustice4

கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டும் சிறையில்
அடைப்பு அமெரிக்காவில் ஓஹினோ எனும் பகுதியில், அகதிகளை நாடு கடுத்த தனது ஓட்டுனர் பதிவை கொடுத்து உதவினார் என்பதற்காக, தொடர்ந்து ஐந்து வருடங்கள் கிறிஸ்மஸ் தினத்தை மட்டும் சிறையில் கழிக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்டது.
02-1449025175-someweirdpunishmentsgivenbyjustice5

மாற்று தீர்ப்பு
இந்த தண்டனை ஏற்க தவறினால் அல்லது அடுத்து வரும் ஆண்டுகளில் கிறிஸ்மஸ் தினத்தன்று சிறையில் இருக்க தவறினால் 15 வருட சிறை தண்டனையை அவர் ஏற்க வேண்டும் என்று தீர்பளிக்க பட்டது.
02-1449025180-someweirdpunishmentsgivenbyjustice6

20 மணி நேரம் இசைக் கேட்க வேண்டும்
ஓர்நாள் விக்டர் எனும் 24 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் அதிக சத்தத்துடன் ராப் பாடல்களை ஒலிக்க செய்தமைக்காக 150 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
02-1449025187-someweirdpunishmentsgivenbyjustice7

மாற்று தீர்ப்பு
இல்லையேல் மாற்று தீர்ப்பாக 20 மணிநேரம் பீத்தோவன், ஷொபன் போன்றவர்களின் கிளாசிக் இசையை கேட்க வேண்டும், 35 டாலர்கள் அபராதம் கட்டினால் போதும் என்று தீர்ப்பு வழங்கினர். ஆனால், 15 நிமிடங்களுக்கு மேல் அந்த இசையை கேட்க முடியாமல் போன அந்த இளைஞர், முதல் தீர்ப்பையே ஒப்புக் கொண்டு அபராதம் செலுத்தினார்.
02-1449025192-someweirdpunishmentsgivenbyjustice8