நம் தினப்பாவனையில் உள்ள நாசாவின் சில ஆச்சரியமூட்டும் கண்டுப்பிடிப்புகள்!

நாசா, ப்ளுடோவின் வாசல் வரை எட்டிப்பார்த்துவிட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம். நம்முலகில் நடந்த, நடந்துக்கொண்டிருக்கும், நடக்கவிருக்கும் என மூன்று காலத்தையும் அக்குவேறு, ஆணிவேராக பிரித்து மேய்ந்துக்கொண்டிருக்கும் அறிவியல் பிரபஞ்சம்.

மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற இரண்டாம் உலகை சல்லடையிட்டு தேடிக்கொண்டிருக்கிறது. செயற்கை கோள்களை தீபாவளி ராக்கெட் போல விண்வெளிக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் நாசா, எண்ணற்ற கண்டுபிடிப்புகளை இவ்வுலகிற்கு சமர்ப்பணம் செய்துள்ளது.

எட்டாத உச்சங்களை எல்லாம் கட்டியணைத்த நாசா, நாம் நம்ப முடியாத அளவு, நமது அன்றாட வாழ்வில் தினந்தோறும் பயன்படுத்தும் சிலவற்றையும் கண்டுப்பிடித்துள்ளது. இவை கண்டிப்பாக உங்களை ஆச்சரியமூட்டும் வண்ணம் இருக்கும்.

ரன்னிங் ஷூ
நாசாவின் பொறியியலாளர்கள் குழு, விண்வெளிக்கு செல்லும் ஆராய்ச்சியாளர்களுக்கு இலகுவான ரப்பர் மோல்ட் செய்யப்பட்ட ஹெல்மட் உருவாக்கினர். பிறகு ஷூ தயாரிக்கவும் இதே முறையை (ரப்பர் மோல்ட்) கையாளலாம் என முடிவு செய்தான் பயனாக தான் நாம் இன்று பயன்படுத்தும் ரன்னிங் ஷூ உருவாக்கப்பட்டது. பிறகு தடகள வீரர்களுக்கு என சிறப்பு ஷூவாக இது தயாரானது.
03-1438580424-1eleventhingsyoudidntknowwereinventedbynasa

மொபைல் கேமரா
இந்நாட்களில் செல்ஃபீ எடுக்காத மக்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் செல்ஃபீ எடுக்க உதவும் மொபைல் கேமராவும் நாசா கண்டுப்பிடித்தது தான். முதலில் இது வான்வெளி ஆராய்ச்சிக்காக கண்டுபிடிக்கப்பட்டது. வான்வெளியில் புகைப்படம் எடுக்க எடை அதிகமான கேமராவை பயன்படுத்த முடியது. எனவே, சிறியதாக வடிவமைக்க CMOS சென்சார் என்பதை டெவலப் செய்து நாசா சிறிய கேமராவை வடிவமைத்தது. இது பின்னாளில் மொபைல்களில் சிறப்பம்சமாக இணைக்கப்பட்டது.
03-1438580431-2eleventhingsyoudidntknowwereinventedbynasa

கீறல் விழாத லென்ஸ்
கடந்த 1972ஆம் ஆண்டு அமெரிக்காவின் எப்.டி.ஏ கண் கண்ணாடிகள் கீறலின்றி மற்றும் உடையாத வண்ணம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தது. இதன் பின்னர் நாசா பிளாஸ்டிக் லென்ஸ்களை கண்டுபிடித்தது. இது உடைந்தாலும் கண்களை பாதிக்காது, இலகுவானது, பாதுகாப்பானது. இதில் எளிதாக கீறல் ஏற்படாது மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
03-1438580438-3eleventhingsyoudidntknowwereinventedbynasa

ஐஸ்-எதிர்ப்பு விமானங்கள் (Ice-resistenace Airplanes)
ஐஸ் அல்லது பனி விமானகளை பாழாக்கிவிடும். ஒயினில் ஐஸ் கரைவது போல தான் ஐஸும், விமானமும் என்று அந்நாட்களில் கூறி வந்துள்ளனர். இதற்கு ஓர் நல்ல தீர்வு கொண்டுவர, எலெக்ட்ரானிக் சார்ந்து நிறைய தீர்வுகள் கண்டறிந்து ஐஸினால் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் விமானத்தை உருவாக்கினர் நாசாவின் பொறியியலாளர்கள். மற்றும் இதன் விளைவாக தான் இப்போது அனைத்து விமானங்களிலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறிய ரக எஞ்சின்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
03-1438580492-12eleventhingsyoudidntknowwereinventedbynasa

மௌஸ்
வீட்டில் கணினி உபயோகிக்கும் பலரும் கீ-போர்டை தொடவே மாட்டார்கள், அனைத்திற்கும் மௌஸ் தான். கணினி பயன்படுத்துவதை எளிதாக இருப்பதற்கு முழு காரணம் மௌஸ் தான். இதை கண்டுபிடித்ததும் நாசாவின் பொறியியலாளர்கள் தான்.
03-1438580443-4eleventhingsyoudidntknowwereinventedbynasa

கம்பியில்லா பவர் ட்ரில்ஸ்
வீட்டில் எளிதாக துளையிட உதவும் கம்பியில்லா பவர் ட்ரில்ஸ், நாசாவால் கண்டுபிடிக்கபப்ட்டது. உண்மையில் இது, விண்வெளியில் எளிதாக ஆராய்ச்சியாளர்கள் துளையிட உதவ கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்.
03-1438580449-5eleventhingsyoudidntknowwereinventedbynasa

தண்ணீர் வடிகட்டிகள்
வாட்டர் ஃபில்லர் எனப்படும் தண்ணீர் வடிகட்டிகளை கண்டுபிடித்ததும் நாசா தானாம்.
03-1438580455-6eleventhingsyoudidntknowwereinventedbynasa

CAT ஸ்கேனர்
எளிதாக ஸ்கேன் செய்து உடலில் என்ன கோளாறு இருக்கிறது என கண்டறிய பயன்படுத்தப்படும் CAT ஸ்கேனரை கண்டுப்பிடித்ததும் நாசா தான்.
03-1438580461-7eleventhingsyoudidntknowwereinventedbynasa

ஜாய் ஸ்டிக்
90-களில் ப்ளே ஸ்டேஷனில் விளையாடிய குழந்தைகளுக்கு மட்டுமே தெரிந்தது இந்த ஜாய் ஸ்டிக்கின் அருமை. இதை கண்டுப்பிடித்ததும் நாசா தான்.
03-1438580468-8eleventhingsyoudidntknowwereinventedbynasa

நீச்சல் உடைகள்
அனைத்து நீச்சலுடைகளும் நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டது இல்லை. ஆனால், நீச்சல் வீரர்கள் விரைந்து இயங்க உதவும் உடலோடு ஒட்டிய வண்ணம் தயாரிக்கப்பட்ட ஃபேப்ரிக் நீச்சல் உடைகள் நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டது தானாம்.
03-1438580476-9eleventhingsyoudidntknowwereinventedbynasa

சோலார் பவர்
தண்ணீர், காற்றினை கடந்து, அடுத்து உலகமே சூரிய ஒளியில் இருந்தும் சக்தியை பெற உதவும் சோலார் பவரை பயன்படுத்து மின்சக்தியை எடுத்துக்கொண்டிருக்கிறது. இதை கண்டுபிடித்ததும் நாசா தானாம்.
03-1438580485-11eleventhingsyoudidntknowwereinventedbynasa