மனித உரிமையா? அப்படின்னா என்ன?? என்று கேள்வி கேட்கும் டாப் 10 நாடுகள்!

கொடுங்கோல் ஆட்சி புரிந்து மக்களை கொடுமை செய்த எவ்வளவோ சர்வதிகரிகளை நாம் பார்த்துள்ளோம். ஆயிரக்கணக்கில் உயிர்களை பலிவாங்கி, சித்திரவதை செய்து, ஆண், பெண் என்ற பேதமின்றி உடலளவில் துன்புறுத்தி சொல்ல நாகூசும் செயல்கள் நடந்த வரலாற்றை நாம் தினசரி நாளிதழ்களில் கூட படித்திருப்போம்.

ஆனால், அரசை ஆட்டிப் படைக்கும் மக்கள், மக்கள் மீது எந்த சட்டத்தையும் திணிக்காது இருக்கும் அரசு பற்றி நீங்கள் எங்காவது படித்தோ, கேட்டோ இருக்கிறீர்களா??? மனித உரிமையா?? அப்படின்னா என்ன?? என்று கேள்வி கேட்கும் நிலை தான் இந்த பகுதிகளில் நிலவுகிறது. பெரும்பாலும் யாரும் இவ்வாறான செய்திகளை படித்திருக்க வாய்ப்பில்லை.

நமது உலகில் சாத்தியமற்றது என ஏதுமில்லை. அந்த வகையில் இதுவும் சாத்தியப்பட்டு தான் இருக்கிறது. எந்த சட்டத்திட்டங்களும் இல்லாததால் தாங்கள் நினைத்தப்படி உல்லாசமாய், பல நாச வேலைகள் செய்துக் கொண்டு வாழும் நாடுகள் இருக்கின்றன. இதில் பல நாடுகள் அடிப்படை உரிமையும், சாப்பாட்டிற்கு வழியில்லாத நிலையில் உள்ள நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெனிசுலா
இந்நாட்டில் இருக்கும் குற்றப்பதிவு சதவீதம் 57%. தென் அமெரிக்காவில் பெரிதாய் எந்த சட்டமும் இல்லாத நாடு இது. இந்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. உணவும் இல்லை, கிடைக்கும் உணவும் அதிக விலைக் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம்.
poverty_venezuela

மெக்ஸிகோ
இங்கு போதை மருந்து சப்ளை அதிகம். சாலை பகுதிகளில் கூட கேட்பார் அற்று மக்கள் கடும் போதையில் இருப்பார்கள். அடிக்கடி வெவ்வேறு கூட்டத்தை சேர்ந்த மக்கள் சண்டையிட்டு கொள்வார்கள். கொலை வழக்குகளின் எண்ணிக்கை இங்கு அதிகம். அப்பாவி மக்கள் தான் பெருமளவில் கொல்லப்படுகிறார்கள்.
89969642_d1

ஈராக்
யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்று அறியாத நிலையில் மக்கள் உயிர்வாழும் பகுதி ஈராக். இன்று வரையிலும் காரணமின்றி உயிரிழக்கும் மக்கள் இங்கு அதிகம். சட்டத்திட்டங்கள் என்றால் என்ன? என்ற கேள்வி தான் இங்க நிலவுகிறது.
Iraq

புருண்டி
உலகின் மிகவும் ஏழை நாடுகளில் புருண்டியும் ஒன்று. இந்நாட்டில் சட்டம் என்ற ஒன்று பெரிதாய் இல்லை. கலவர பூமியாக தான் பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. இந்நாட்டில் உள்நாட்டு போர் அவ்வப்போது நடக்கும். இந்நாட்டில் வாழும் மக்களின் ஆரோக்கியம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. எச்.ஐ.வி நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு ஏராளம். அடிப்படை உரிமைக்கே சண்டைக்கட்டும் நிலையில் தான் இந்நாடு இருக்கிறது.
_82760522_027049507-1

காங்கோ
அதிகாரம் ஏற்றுக் கொண்டு சட்டம் கொண்டு வரும் அளவில் இங்கு யாரும் இல்லை என்பது தான் உண்மை. அமைதி என்பது இங்கு கிடைக்காத ஒன்று. ஊழால் கரைப்படிந்து போயிருக்கும் நாடுகளில் இதுவும் ஒன்று. இங்கு கற்பழிப்பு பெருமளவில் நடக்கும் குற்றமாக இருக்கிறது. பெண்கள் மீதோ, குடிமக்கள் மீதோ அக்கறையற்ற நாடு.
A woman weeps as U.S. army soldiers from B Troop, 1st Squadron, 40th Cavalry detain her male relatives in a pre-dawn raid in the Radwaniyah area of southern Baghdad, Iraq, Thursday, Oct. 11, 2007. The unit is in search of men suspected of a 2005 attack on American soldiers; three men, including a suspected triggerman for a June 13 roadside bomb attack on their unit were detained. (AP Photo/Maya Alleruzzo)

ஆப்கானிஸ்தான்
தாலிபானின் பெரும் ஆதிக்கம் கொண்டுள்ளது தான் ஆப்கானிஸ்தானின் பிரச்சனையே. இவர்கள் அரசு கூறுவதை விட, இவர்களே சுயமாக முடிவெடுக்கும் பண்பு கொண்டவர்கள். ஆப்கானிஸ்தானில் வறுமை மிகவும் அதிகமாக இருக்கிறது. பெண்ணுரிமை கேள்விக்குறியான விஷயமாக இருக்கிறது.
_55821964_talibwaveap464

பாகிஸ்தான்
மதம், தீவிரவாதம் என்ற பல பிரச்சனையின் சுவர்களுக்கு மத்தியில் சிறைப்பட்டு இருக்கிறார்கள் பாகிஸ்தானின் அப்பாவி மக்கள். போலீஸ் அதிகாரிகளை எளிதாக லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலை இங்கு நிலவுகிறது. குழந்தை கடத்தல், கார் வாகன திருட்டு எல்லாம் இங்கு சகஜம் என்று கூறப்படுகிறது.
pakistan-drone-sfSpan

பிரேசில்
சுகாதாரம், கல்வி போன்றவை முழுமையாக அழிந்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் பிரேசிலில் இருக்கிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் சீரான கல்வியை கேட்டு போராட்டம் செய்து வருகிறார்கள். திருட்டு, சமூக அநீதி போன்றவை பிரேசிலில் அதிகம். ஏழை, பணக்காரன் ஏற்ற தாழ்வு அதிகம் உள்ள நாடு. இங்கும், சரியான சட்டத்திட்டங்கள் இல்லை.
brazil-dirty-water

சோமாலியா
ஆப்ரிக்காவின் மிகப்பெரிய ஏழை நாடு சோமாலியா. அதிவிட பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கும் நாடு. பசி, பட்டினி, தீவிரவாதம் என மிகவும் கொடுமைகளை சந்திக்கும் ஓர் நாடு சோமாலியா. சட்டத்திட்டங்களுக்கு எல்லாம் இங்கு ஒரு மரியாதையும் கிடையாது. போதை பொருள் அதிகமாக புழங்கும் நாடு. கட்டப் பஞ்சாயத்து தான் பெரும்பாலும் தவறுகளுக்கு தண்டனை கொடுக்கிறது.
Abaar-keydmedia-620x330

கொலம்பியா
வறுமைக்கும், பஞ்சத்திற்கும் பெயர்போன மற்றுமொரு பகுதி கொலம்பியா. அடிப்படை உரிமையும், உரிமை இழப்பை எதிர்த்தும் போராடும் நாடு. குடிமக்களுக்கே சரியான பாதுகாப்பு இல்லாத நாடாக திகழ்கிறது கொலம்பியா. இந்நாட்டில் வாழும் பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள்.
12poverty3