மாங்கா பிரேம்ஜி – அறிவாளியாக நினைக்கும் அடி முட்டாள்

1427879723-6317படத்தின் பெயர் மாங்கா. பிரேம்ஜி ஹீரோ. விஞ்ஞானி, பாகவதர் என்று ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரு வேடங்கள், இரு நாயகிகள்.
முட்டாள்களை, அவன் சரியான மாங்கா என்போம் அல்லவா. அந்த அர்த்தத்தில்தான் இந்தப் படத்தின் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் கதை என்ன? இயக்குனர் ஆர்.எஸ்.ராஜா சொல்வதை கேட்போம்.
“இந்தப் படத்தில் சிவாவாக வரும் பிரேம்ஜி தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக நினைத்துக் கொண்டிருக்கும் அடி முட்டாள். இவனுடைய வாழ்நாள் குறிக்கோள் தானே சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதன் மூலம் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைத்து மக்களை காக்க வேண்டும் என்பதுதான்.
இவனுடைய முட்டாள்தனமான கண்டுபிடிப்புகளால் எல்லா மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இவனுடைய கண்டுபிடிப்பால் 1950 காலகட்டத்தை சேர்ந்த பாகவதரை சந்திக்கிறான்.
இருவருக்குள்ளும் கடும் போட்டி ஆரம்பிக்கிறது. இருவரில் யார் ஜெயித்தார்கள், சிவா ராக்கெட் அனுப்பி ஓசோன் ஓட்டையை அடைத்தானா என்பதே திரைக்கதை” என்றார் இயக்குனர்.

Leave a Reply