சட்டசபை முன் கவர்ச்சி போஸ்: மல்லிகா ஷெராவத் படத்துக்கு தடை விதிக்க ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

36497413-6171-438f-b057-1993054af2b4_S_secvpfசட்டசபை முன் கவர்ச்சி போஸ் கொடுத்த மல்லிகா ஷெராவத் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்திப்பட டைரக்டர் கே.சி.பொகாடியா, ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ (அழுக்கு அரசியல்) என்ற பெயரில் சினிமா படம் எடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் 2011–ம் ஆண்டு நடந்த பன்வாரி தேவி படுகொலையை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பன்வாரி தேவி கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது.
முன்னாள் காங்கிரஸ் மந்திரி மகிபால் மடெர்னா, முன்னாள் எம்.எல்.ஏ. மால்கன் சிங் ஆகியோர் இந்த கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் உள்ளனர். இந்த இரு அரசியல்வாதிகளும் தன்னுடன் உல்லாசமாக இருந்த போது அதை வீடியோ எடுத்து வைத்து இருந்தார். அந்த வீடியோவை கைப்பற்றும் முயற்சியில் பன்வாரி தேவி கொலை செய்யப்பட்டார்.
‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ படத்தில் பன்வாரி தேவியாக கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் வருகிறார். நடிகர்கள் ஓம்பூரி, நசிருதீன்ஷா அனுபம் கேர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டரில் ராஜஸ்தான் மாநில சட்டசபை கட்டிடம் இடம் பெற்றுள்ளது.
அதன்முன் சிவப்பு விளக்கு பொருத்திய காரின் மீது நடிகை மல்லிகா ஷெராவத் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக அமர்ந்து இருக்கிறார். இந்த போஸ்டருக்கு ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சட்டசபை கட்டிடத்தையும் சட்டசபை உறுப்பினர்களையும் இழிவுபடுத்த ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டசபை முன் மல்லிகா ஷெராவத் ஆபாசமாக அமர்ந்து இருக்கும் படம் சட்டசபையின் கன்னியத்தை குறைப்பதாக உள்ளது. இந்த பிரச்சினையை சட்ட சபையில் கிளப்புவோம் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம்லால் சர்மா ஆவேசத்துடன் கூறினார்.
ராஜஸ்தான் எம்.பி.யும், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரியுமான ராஜேந்திர ரதோர் கூறுகையில் இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இந்தப் படம் மாநிலத்தின் மரியாதைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி முதல்–மந்திரி கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் ரதோர் கூறினார்.

Leave a Reply