ஹோலி பண்டிகையில் ஆபாச போஸ்: இந்தி நடிகை சோபியா கைது ஆவாரா?

48521938-41ab-4c35-b7bd-6d4a2eb94536_S_secvpfஹோலி பண்டிகையில் அரைகுறை ஆடையில் ஆபாச போஸ் கொடுத்த இந்தி நடிகை சோபியா கயாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கைதாகலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.
சோபியா கயாத் இந்தி படங்களில் நடித்து வருகிறார். டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இவர் கவர்ச்சி நடிகை ஆவார்.
சமீபத்தில் ஹோலி பண்டிகையையொட்டி கவர்ச்சி போஸில் தன்னை படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டார். இந்த படம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடலில் வண்ணப் பொடிகளை பூசி ஆபாசமாக இந்த படத்தை அவர் எடுத்து இருந்தார்.
இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஹோலி என்பது ஆன்மீக பண்டிகை. அதை சோபியா கயாத் கொச்சைப்படுத்தி உள்ளார் என்று எதிர்த்தனர். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். சோபியாவிடம் நேரில் விசாரிக்கவும் தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply