ஸ்ருதி-ஹன்சிகாவுக்கு போட்டியாக புலியில் களமிறங்கும் நந்திதா

விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி என இரு கதாநாயகிகள் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

தற்போது, இந்த படத்தில் ‘அட்டக்கத்தி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களில் நடித்த நந்திதாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, இரு கதாநாயகிகள் உள்ள நிலையில் தற்போது நந்திதாவும் இந்த படத்தில் நடிப்பது படத்திற்கு மேலும் பலமாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் படமாக்கிவிட்டு, தற்போது ஆந்திரா அருகில் தலக்கோணம் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply