விஸ்வரூபம் வழக்கை வாபஸ் பெற கமல் மறுப்பு

81bd6bfd-c880-4b5e-bd86-9dd656b0a417_S_secvpf‘விஸ்வரூபம்‘ படம் 2013–ல் வெளியானது. அப்போது இந்த படத்தை தியேட்டர்களிலும், டி.டி.எச்.சிலும் ஒரே நேரத்தில் வெளியிட கமல் திட்டமிட்டார். டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்ப திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விநியோகஸ்தர்களும் இத்திட்டத்தை எதிர்த்தார்கள். இதனால் படத்துக்கு தியேட்டர்கள், கிடைக்காமல் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
பிறகு டி.டி.எச்.சில் ஒளிபரப்பும் முடிவை கைவிட்டு தியேட்டர்களில் மட்டும் ரிலீஸ் செய்தார். அத்துடன் விஸ்வரூபம் படத்தை திரையிட மறுத்ததற்காக தியேட்டர் அதிபர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது இந்திய போட்டி ஆணையத்தில் கமல் புகார் செய்தார். தனது தொழில் உரிமையில் தலையிட்டு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த போட்டி ஆணையம் உத்தரவிட்டது. தியேட்டர் உரிமையாளர்கள் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக இருந்தார்களா என்று விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தியேட்டர் அதிபர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் கமலை சந்தித்து வழக்கை வாபஸ் பெறும்படி வற்புறுத்தினார்களாம். ஆனால் கமல் அதற்கு மறுத்து விட்டார். வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என்று உறுதியாக கூறி விட்டாராம்.

Leave a Reply