விஷ்ணுவுக்காக கதை கேட்காமல் நடித்த ஆர்யா

விஷ்ணு நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘இன்று நேற்று நாளை’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் திரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘அமரகாவியம்’ படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடித்துள்ளார். மேலும், நடிகர் ஆர்யாவும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ஆர்யா இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகர் விஷ்ணு கூறும்போது, இக்கதையை நான் கேட்டபோது, இதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதில் ஆர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். உடனடியாக ஆர்யாவிடம் சென்று கேட்டபோது, கதையை படித்துப் பார்க்கமாலேயே உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். எங்களுடைய இந்த சிறந்த நட்பு சினிமாவுக்கு வெளியேயும் நன்றாகவே தொடர்கிறது என்றார்.

இப்படத்தில் விஷ்ணுவுடன் கருணாகரன், ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ரவிக்குமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். ‘ஆம்பள’ படத்துக்கு இசையமைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

திருக்குமரன் எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமாரும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜாவும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Leave a Reply