விஷால் படத்துக்கு வேட்டையன் தலைப்பு இல்லை

இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். விஷால்-சுசீந்திரன் இணையும் படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை. தலைப்பு தேர்வானதும் உடனடியாக அறிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
‘வேட்டையன்’ என்ற தலைப்பை ஏற்கெனவே இயக்குர் பி.வாசு பதிவு செய்து வைத்துள்ளார். அவரிடம் அனுமதி கேட்டபோது, இந்த தலைப்புக்கு பெரிய தொகை கேட்டதால் இப்படத்தின் தலைப்பை கைவிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இப்படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளனர்.