விவாகரத்துக்கு பின் தமிழில் அறிமுகம் சூர்யா படத்தில் நடிக்கிறார் மஞ்சுவாரியர்

c82ec924-cd31-4a94-b21d-80973b3a02c5_S_secvpfமஞ்சுவாரியர் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். நடிகர் திலீப்பை திருமணம் செய்த பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.
பதினாறு வருடங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்திய இவர்கள் இல்லற வாழ்க்கையில் சமீபத்தில் புயல் வீசியது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இரு தினங்களுக்கு முன்பு கோர்ட்டு அவர்களுக்கு விவகாரத்து வழங்கியது.
மஞ்சுவாரியர் தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். மலையாளத்தில் நடித்த ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் ஜோதிகா நடிக்க ரீமேக் ஆகி உள்ளது.
விரைவில் இது ரிலீசாக உள்ளது. ஹவ் ஒல்டு ஆர் யு படத்தில் மஞ்சுவாரியரின் நடிப்பு சூர்யாவுக்கு மிகவும் பிடித்து போனது. இதனால் அவர் தயாரிக்க உள்ள படத்தில் மஞ்சுவாரியரை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளார்.
இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இவர் ‘பசங்க’ படம் மூலம் பிரபலமானவர். தற்போது சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் சூர்யா தயாரிப்பில் மஞ்சுவாரியர் நடிக்கும் படத்தை இயக்குகிறார்

Leave a Reply