விருந்து தடபுடலுடன் முடிந்தது மாரி

1423112536-7024பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த மாரி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இறுதி நாளான நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு தனுஷ் விருந்தளித்தார்.
தனுஷின் வுண்டர்பாரும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் ஃப்ரேம்ஸும் இணைந்து மாரியை தயாரித்து வருகின்றன. விஜய் யேசுதாஸ் இந்தப் படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். அனிருத் இசை.
இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது. கடைசி நாளான நேற்று விருந்துக்கு ஏற்பாடு செய்த தனுஷ், தன் கையாலேயே அனைவருக்கும் விருந்து பரிமாறினார்.

Leave a Reply