விஜய் படத்தில் நடிக்கும் வடிவேலு

233c35b3-518c-45c6-b5c5-9164178e9fdf_S_secvpfவிஜய் படத்தில் வடிவேலு காமெடி வேடத்தில் நடிக்கிறார். விஜய்யும் வடிவேலுவும் ஏற்கனவே வசீகரா, பகவதி, போக்கிரி, சுறா, காவலன் படங்களில் இணைந்து நடித்தனர். இவர்களின் காமெடி கூட்டணி வரவேற்பை பெற்றது.
வடிவேலு தற்போது கதாநாயகனாக நடிப்பதால் மற்ற ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடங்களில் வருவதை தவிர்த்தார். தற்போது எலி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
விஜய் புலி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது. இப்படம் முடிந்ததும் விஜய் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் காமெடி வேடத்தில நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply