விக்ரம் பிரபுவின் அடுத்தப் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

விரைவில் வெளியாக உள்ள இப்படங்களை அடுத்து புதிதாக ஒரு படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறாராம். புதிய படத்தை ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய நவீன் ராகவன் இயக்கவிருக்கிறாராம்.
பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகியை தேடிவருகின்றனர்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இளையராஜாவின் இசையில் 1000-மாவது படமான பாலாவின் தாரைதப்பட்டை விரைவில் வெளியாக உள்ளது.