விக்ரம் படத்தில் நேபாளியாக வரும் சமந்தா

25a38247-c2a0-4180-9305-80d08cc71c56_S_secvpfவிக்ரம் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்கி வருகிறார். இப்படத்தில் சமந்தாவுக்கு இரட்டை வேடம்.
இரண்டு விதமான வித்தியாசமான தோற்றத்தில் வரும் சமந்தா இப்படத்தில் கிராமத்து நேபாளி பெண் போன்ற ஒரு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதற்காக நேபாளின் பாரம்பரிய உடையணிந்து சமந்தா நடித்த காட்சிகளை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.
இப்படம் நெடுஞ்சாலை பயணத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இக்கதைக்காக இந்தியாவில் பல்வேறு வித்தியாசமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
தற்போது நேபாளில் படத்தின் முக்கியமான காட்சிகளையும், ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளையும் படமாக்க உள்ளனர். ஏப்ரல் 15-ந் தேதி வரை இங்கு படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.
‘ஐ’ படத்தை தொடர்ந்து ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் பணிகளில் பிசியாகிவிட்டதால் நடிகர் விக்ரம் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு விக்ரம் தனது குடும்பத்துடன் பின்லாந்து மற்றும் நார்வேக்கு சுற்றுலா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply