விக்ரமுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்

f4cd950c-5124-4ee9-baa9-fdd269d0947c_S_secvpfவிக்ரம் படம் என்றாலே வெளிவருவதற்கு நீண்டகாலம் ஆகும் என்ற நிலை தற்போது தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது.
விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ஐ’ படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையை தகர்த்தெறிய தற்போது விக்ரம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக கூறப்பட்டது.
தற்போது, ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. கௌதம் மேனன்-ஆனந்த் சங்கர் இருவரது படங்களும் ஜுன் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு படங்களுக்கும் தலா 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடிப்பது என்றும் விக்ரம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் நிபந்தனை விதித்திருக்கிறாராம் விக்ரம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply