விக்ரமுக்கு இரண்டு ஜோடிகள் காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த்

1426159736-6722விஜய் மில்டனின் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வரும் விக்ரம் அடுத்து இரு படங்களில் நடிக்க உள்ளார். ஒன்று கௌதம் இயக்கும் படம். இன்னொன்று அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் படம். இதில் ஆனந்த் சங்கர் இயக்கும் படம் வரும் ஜுனில் தொடங்குகிறது.
இந்தப் படத்தில் காஜல் அகர்வால் விக்ரமின் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ப்ரியா ஆனந்த் சமீபமாக நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் வை ராஜா வை படம் மட்டுமே இப்போது ப்ரியா ஆனந்தின் முன் இருக்கும் ஒரே நம்பிக்கை.
இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply