வாட்ஸ்அப், இணையதளங்களில் நடிகைகள் ஆபாச படங்களை பரப்புவது அநாகரீகம்: ரச்சனா

9b4dae20-0078-43bd-bd70-e8d23a3e943a_S_secvpfநடிகைகளின் ஆபாச படங்கள் வாட்ஸ்அப் மற்றும் இன்டர்நெட்களில் பரவி வருகின்றன.
நடிகைகள் ராதிகா ஆப்தே, வசுந்தரா போன்றோர் ஆடையின்றி இருப்பது போன்ற படங்கள் பரவின.
லட்சுமிமேனன் பெயரில் ஆபாச வீடியோ படம். நடிகை ஸ்ரீதிவ்யா ஆடையில்லாத தனது உடம்பை செல்பியில் படம் எடுப்பது போன்ற படங்கள் வெளியானது. நடிகை ஹன்சிகாவின் குளியலறை ஆபாச வீடியோவும் வெளியானது.
இந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்ட போலி படங்கள் என நடிகைகள் தரப்பில் மறுக்கப்பட்டு உள்ளது. வேறு நிர்வாண பெண்கள் உடலுடன் தங்களின் முகங்களை ஒட்டி மார்பிங் செய்து வெளியிட்டு இருப்பதாக கூறினர். தற்போது ஓட்டல்களில் தங்க நடிகைகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
குளியல் அறைகளிலும் படுக்கை அறையிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தி இருக்கலாம் என பயப்படுகிறார்கள். இந்த நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகை ரச்சனாவின் நிர்வாண படமும் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தனது பேஸ்புக்கில் ரச்சனா கூறி இருப்பதாவது:–
நடிகைகளின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. இது அநாகரீகமான செயல். என்னிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி பலர் அறிவுரை கூறினார்கள். நான் இந்த சமூகத்தை பார்த்து கேட்கிறேன்.
எப்படி நான் கவனமாக இருப்பது. சில வக்கிரபுத்திகாரர்கள் எனது படத்தையும் மார்பிங் மூலம் ஆபாசமாக மாற்றி வெளியிட்டு உள்ளனர். அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. இந்த சமூகத்தின் கலாசாரத்தை நினைத்து அவமானப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்.

Leave a Reply