வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்

cff57cfd-a060-4c5b-a5b8-eabef40d9161_S_secvpfசிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘காக்கி சட்டை’. இப்படத்தையடுத்து தற்போது ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பொன்ராம் இயக்கி வரும் இப்படத்தை இமான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது சிவகார்த்திகேயனுக்கு விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வந்தது. இதை சிவகார்த்திகேயன் மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது,
என்னைப் பற்றி வதந்திகள் பரவி வருகிறது. நான் நலமாக இருக்கிறேன். தற்போது ரஜினி முருகன் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வருகிறது. ஏப்ரல் 25ம் தேதி ரஜினி முருகன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது. அதற்காக நான் காத்திருக்கின்றேன் என்றார்.

Leave a Reply