லாபத்தில் பங்கு கேட்கிறார் – பாபி சிம்ஹா மீது குற்றச்சாட்டு

ஜிகிர்தண்டா படத்துக்குப் பிறகு சிம்ஹாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. அவரை ஹீரோவாக வைத்து படம் செய்ய போட்டிப் போடுகிறார்கள். இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்த திடீர் டிமாண்ட் காரணமாக, சிம்ஹா தயாரிப்பாளர்களை, இயக்குனர்களை டார்ச்சர் செய்வதாக ஒருசாரார் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது படத்தின் இயக்குனர் மருதுபாண்டியன் சிம்ஹா மீது புதுப்புகார் ஒன்றை கூறியுள்ளார்.

சிம்ஹா லாபத்தில் பங்கு கேட்கிறார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு.

ஆனால், அதனை மறுத்திருக்கும் சிம்ஹா, ஐந்து வருடங்களுக்குமுன் நான் நடித்த படம் அது. இசை வெளியீட்டைக்கூட என்னிடம் சொல்லவில்லை. நடித்தது நான். ஆனால் வேறு ஒருவரை டப்பிங் பேச வைத்திருக்கிறார்கள். எனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் என்று மருதுபாண்டியன் மீது புகார்களை அடுக்குகிறார்.

எப்படியோ, சென்னை கொஞ்சம் கசப்புடன்தான் வரவேற்கிறது.

Leave a Reply