ரெயிலில் குத்தாட்டம் போட்ட நகுல்

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்திற்குப் பிறகு நகுல் தற்போது நடித்து வரும் படம் ‘நாரதன்’. இதில் நகுலுக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் மற்றும் ஸ்ருதி ராமகிருஷ்ணா நடிக்கிறார்கள்.

மேலும் பிரேம்ஜி, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, வையாபுரி, பவர்ஸ்டார் சீனிவாசன், பாண்டு, கும்கி அஸ்வின் ஆகியோர் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தை நாகா வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமனையும் அவரது மகளை பார்ப்பதற்காகவும் ரயிலில் சென்னைக்கு வரும் கதாநாயகன் நகுல், சில ரவுடிகளால் துரத்தப்படும் நாயகியை காப்பாற்றுகையில், எதிர்பாராவிதமாக பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்கிறான்.

நாரதன் என்ற கதாபாத்திரமாக படத்தில் அறிமுகமாகும் பிரேம்ஜி, நகுலின் தாய்மாமன் குடும்பத்துக்குள் புகுந்து, பல கலகங்களை ஏற்படுத்தி, இறுதியில் “நாரதன் கலகம் நன்மையில் முடியும்” என்னும் வாக்கியத்தை நினைவு கூறும் வகையில், அனைத்து பிரச்சனைகளையும் எவ்வாறு தீர்த்து வைக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் ஆக்சன் கலந்து உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தின் ஆரம்பத்தில், ரெயிலில் நகுல் ஆடிப்பாடும் ஒரு குத்துப்பாடல் ஒன்று சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் சலீம் படத்தில் “மஸ்காரா” பாட்டுக்கு நடனமாடிய அஸ்மிதா, மும்பை அழகியுடன் சேர்ந்து ஆடும் ஒரு பாடல், பிரம்மாண்டமான செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் இறுதியில், நகுல் ரவுடிகளுடன் மோதும் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி, பின்னி மில்லில் 10 நாட்களாக படமாக்கியிருக்கிறார்கள். இதுதவிர, நகுல் மற்றும் ஸ்ருதி பாடும் ஒரு டூயட் பாடல், அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply