ருத்ரம்மாதேவி பின்னணி இசை – லண்டன் சென்றார் இளையராஜா

இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் பிடித்ததால் படத்தின் ட்ரெய்லருக்கு மட்டும் பின்னணி இசையமைக்க 3 நாள்கள் அவர் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
தற்போது படத்தின் பின்னணி இசைக்காக அவர் லண்டன் சென்றுள்ளார். அங்குள்ள ஆர்கெஸ்ட்ராவை வைத்து அவர் பின்னணி இசையை அமைக்கிறார். அதற்காக அவர் இரண்டு வாரங்கள் லண்டனில் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது.
70 கோடிகளில் தயாராகியிருக்கும் இப்படம், அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.