ரஜினி படத்தின் தலைப்பை கைப்பற்றிய விஷால்

6f3f9030-e50c-4b84-acd6-4c9bc3586de7_S_secvpfவிஷால்-சுசீந்திரன் கூட்டணி மீண்டும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தநிலையில், இப்படத்தின் தலைப்பு ‘காவல் கோட்டம்’ என்று வைத்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது ‘பாயும் புலி’ என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கின்றனர். ஏற்கனவே ‘பாயும் புலி’ என்ற தலைப்பில் ரஜினி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.
ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி வரும் ‘பாயும் புலி’ படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஷால் நடிக்கிறார். சமுத்திரகனி விஷாலின் அண்ணனாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த வருடத்தில் இப்படத்தை வெளியிட மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.
ஏற்கெனவே, விஷால்-சுசீந்திரன் கூட்டணியில் வெளிவந்த பாண்டியநாடு படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் இந்த படமும் இடம்பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply