ரஜினியின் ஸ்டைலை காப்பியடித்த சன்னி லியோன்

1426131966-1508இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் விற்பனைக்கு சாத்தியமுள்ள பொருளாக வளர்ந்து நிற்கிறது ரஜினியின் புகழ். இந்தி பிரபலங்களும் ரஜினியின் பெயரை பயன்படுத்தி லாபத்தின் சதவீதத்தை அதிகரிக்க நினைக்கின்றனர்.
சன்னி லியோன் தற்போது, ஏக் பஹேலி லீலா என்ற படத்தில் நடித்து வருகிறார். கதைப்படி அவர் ரஜினியின் தீவிர ரசிகர். சூப்பர் ஸ்டார் எனத் தொடங்கும் பாடல் காட்சியில் கண்ணாடியை துடைத்து மாட்டும் ரஜினியின் ஸ்டைலை அப்படியே காப்பி செய்துள்ளார்.
தயாரிப்பாளரும் அந்தப் பாடலின் நடன அமைப்பாளருமான அக்மத் கான் சன்னி லியோனுக்கு இந்தக் காட்சியை விளக்கித்தர, முப்பது நிமிடங்கள் பயிற்சி செய்து, ரஜினி போலவே ஸ்டைலாக கண்ணாடியை மாட்டியிருக்கிறார் சன்னி லியோன்.
ரஜினியின் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும் என்று இந்த முன்னாள் நீலப்பட நடிகை கூறியுள்ளார். ரஜினியுடன் நடிப்பதே என்னுடைய வாழ்நாள் லட்சியம் என்று சன்னி லியோன் கூறும்நாள் தொலைவில் இல்லை.

Leave a Reply