ரஜினிமுருகன் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 18-ந் தேதி வெளியீடு

4c11968d-c39f-4d8e-b22d-583fa864d2cc_S_secvpfதனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘காக்கிசட்டை’ படம் வருகிற பிப்ரவரி 27-ந் தேதி வெளியாகவிருக்கிறது. துரை.செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். அனிருத் இசைமைத்துள்ளார்.
இப்படத்திற்கு பிறகு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். லிங்குசாமி தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். டி.இமான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து கூடிய விரைவில் படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இப்படத்தை உலகம் முழுவதிலும் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், தமிழகம் முழுவதும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரும்பக்கூடியவை…

Leave a Reply