ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சமந்தா: போலீசார் தடியடி நடத்தி மீட்டனர்

தமிழ், தெலுங்கில் சமந்தா முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது விக்ரம் ஜோடியாக ’10 என்றதுக்குள்ள’ படத்திலும் சூர்யா ஜோடியாக ’24’ என்ற படத்திலும் நடிக்கிறார்.

வேல்ராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் தனுஷ் ஜோடியாகவும் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். ஆந்திராவில் சமந்தாவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகைக்கடை திறப்பு விழாவுக்கு சமந்தாவை அழைத்து இருந்தனர். இதையடுத்து அவரை காண அந்த நகைக்கடை முன்னால் ஏராளமான ரசிகர்கள் கூடினார்கள்.

சமந்தா காரில் வந்து இறங்கியதும் அவரை பார்க்க முண்டியடித்தனர். தடுப்புக்காக அமைக்கப்பட்டு இருந்த சவுக்கு கட்டைகளில் ஏறி குதித்து சமந்தாவிடம் கைகுலுக்க முயற்சித்தனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் அவர் சிக்கினார். கடைக்குள் அவரால் செல்ல முடியவில்லை.

இதையடுத்து போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி சமந்தாவை மீட்டு அழைத்து சென்றனர். அங்கிருந்து ரசிகர்களை பார்த்து அவர் கையசைத்தார். பின்னர் நகைக்கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அங்கிருந்த விதவிதமான நகைகளை எடுத்து தனது கழுத்தில் அணிந்து அழகு பார்த்தார்.

Leave a Reply