யூடுபில் ஹிட்டடித்த சகாப்தம்

விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன், ‘சகாப்தம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
இதில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நேஹாஹிங், சுப்ரா ஜயப்பா நடிக்கின்றனர். மற்றும் ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோல் ஒன்றில் வருகிறாராம். புதுமுக இயக்குனர் சந்தோஷ்குமார் ராஜன் இதனை இயக்கியுள்ளார்.
இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷ்ன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரித்துள்ளார். இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலகினர்கள் கலந்துக்கொண்டார்கள்.
இதற்கிடையில், சகாப்தம் படத்தின் டிரைலரை யூடியுபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தையும் தாண்டி விட்டதாம். விஜயகாந்தின் மகன் ஹீரோவாக நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply