யுஏ சான்றிதழுடன் பிப்.5-ந் தேதி வெளியாகிறது என்னை அறிந்தால்

0b22ed90-7fc9-4a13-8758-c2c8c0ae33c3_S_secvpfஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப்ரவரி 5-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. கடந்த பொங்கலுக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘என்னை அறிந்தால்’ சில காரணங்களால் தள்ளிப்போனது.
தற்போது, படத்தின் தணிக்கை எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. தியேட்டர்களிலும் டிக்கெட் விற்பனை தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்திருந்தனர். யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால், படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது. எனவே, படத்தை மறு தணிக்கைக்கு படக்குழுவினர் அனுப்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘யுஏ’ சான்றிதழுடனேயே படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
தற்போது, ‘என்னை அறிந்தால்’ படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதில், படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். மேலும், படம் 176 நிமிடங்கள் 45 நொடிகள் நீளம் கொண்டதாக உள்ளது.
‘என்னை அறிந்தால்’ படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்துள்ளார். விவேக் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.

Leave a Reply