மீண்டும் ரொமான்ஸில் களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா

40e2181b-b300-4939-ae70-9a9e959198ee_S_secvpfஎஸ்.ஜே.சூர்யா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கிய ‘இசை’ படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அவர் இயக்கியதோடு மட்டுமல்லாமல், நடித்தும், இசையமைத்தும் இருந்தார்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு வந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார்.
மீயூசிக்கல் திரில்லராக உருவாக்கிய ‘இசை’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை தனக்கே உரித்தான காதல் பாணியில் எடுக்கவுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்திற்கு தலைப்புகூட உறுதியாகிவிட்டது. ‘ஏழுமலை சித்ரா’ என்ற தலைப்பைத்தான் இப்படத்திற்கு வைத்திருக்கிறார்.
வேளாண்மை பட்டதாரியான ஏழுமலைக்கும், சித்ராவுக்கும் இடையில் நடக்கும் காதலை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இப்படத்தில் ஏழுமலை கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவே நடிக்கவிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் சித்ரா கதாபாத்திரத்திற்கு முன்னணி நடிகைகளில் ஒருவரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா தற்போது ‘இசை’ படத்தின் தெலுங்கு டப்பிங் வேலைகளில் பிசியாக இருக்கிறார். இது முடிந்ததும் ‘ஏழுமலை சித்ரா’ படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply