மாஸ் டப்பிங்கில் பிசியான சூர்யா

061a0cca-d727-4c42-b538-307c6262366f_S_secvpfசூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மாஸ்’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். நயன்தாரா, ப்ரணிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். பார்த்திபன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று விடுமுறை நாளாக இருந்தபோதிலும், ‘மாஸ்’ படத்திற்கான டப்பிங் பணியில் சூர்யா கலந்து கொண்டுள்ளார். சூர்யாவும், வெங்கட் பிரபுவும் டப்பிங் தியேட்டருக்கு முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா, பாண்டிராஜ் இயக்கும் ‘ஹைக்கூ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply