மார்ச் 1-ல் உத்தமவில்லன் ஆடியோ வெளியீடு

a5d14bb4-0262-4187-9125-11d1e6e9b5c9_S_secvpfமார்ச் 1-ல் உத்தமவில்லன் ஆடியோ வெளியீடு கமல் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து வருகிற மார்ச் 1-ந் தேதி இப்படத்தின் பாடலை வெளியிடவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
‘உத்தமவில்லன்’ படத்தை நடிகரும், இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல் வெளியீட்டை தொடர்ந்து விரைவில் படத்தை வெளியிடவும் முயற்சிகள் நடந்து வருகிறது.
கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம்-2’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களின் பணிகளும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

Leave a Reply