பேய் கதைகளை விரும்பும் கோலிவுட் நடிகைகள

கதாநாயகிகள் பேய் படங்களிலும், சரித்திர, புராண படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ரசிகர்களும்இதுபோன்ற படங்களை விரும்பி பார்க்கிறார்கள். இதுபோன்ற படங்கள் வசூலிலும் சக்கை போடு போடுகின்றன.அனுஷ்காவுக்கு இதே மாதிரி படங்கள் குவிகின்றன. ஏற்கனவே ‘அருந்ததி’ பேய் படம் அவரை உச்சத்துக்கு கொண்டு போனது. தற்போது ‘ருத்ரமா தேவி’, ‘பாகுபலி’ என இரு சரித்திர படங்களில் நடிக்கிறார். இவை கதாநாயகி கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்கள்.ருத்ரமா தேவியில் ராணி வேடத்தில் வருகிறார். குதிரை சவாரி, வாள் சண்டை பயிற்சிகள் பெற்று நடிக்கிறார். இப்படங்களுக்கு பிறகு அனுஷ்கா மார்க்கெட் இன்னும் உயரும் என்கின்றனர்.நயன்தாரா ‘மாயா’ என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதில் வித்தியாசமான வேடத்தில் ஆக்ரோஷமாக வருகிறார். ஏற்கனவே ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்து பாராட்டுகள் பெற்றார்.இதுவரை காதல், டூயட் என வந்த திரிஷாவும் தற்போது பேய் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்என மூன்று மொழிகளில் தயாராகிறது. தற்போது அப்பாடக்கர் என்ற படத்தில் திரிஷா நடித்துக் கொண்டு இருக்கிறார். இது முடிந்ததும் பேய் படத்துக்கு வருகிறார். அவர் கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.ஹன்சிகா, ராய் லட்சுமி இருவரும் அரண்மனை பேய் படத்தில் நடித்தனர். டாப்சி ‘காஞ்சனா 2’ பேய் படத்தில் நடித்து வருகிறார்.பேய் படங்கள் லாபம் ஈட்டுவதால் அந்த கதைகளுக்கு டைரக்டர்கள் மாற துவங்கியுள்ளனர். நிறைய பேய் கதைகளோடு &#29
90;ுன்னணி கதாநாயகிகள் வீட்டு கதவுகளை தட்டுகின்றனர்.

Leave a Reply