பெயர் மாறுகிறது ஜனநாதனின் புறம்போக்கு

1412413773-8989பொதுவுடமை கொள்கைளில் ஈடுபாடுள்ள எஸ்.பி.ஜனநாதன் தனது படத்துக்கு, புறம்போக்கு என்று பெயர் வைத்தார். சென்டிமெண்ட் பார்க்கும் சினிமா உலகம், அதென்ன புறம்போக்கு என்று கேள்வி எழுப்பவே, புறம்போக்கு என்னும் பொதுவுடமை என பெயரை மாற்றினார்.
ஆனாலும், புறம்போக்கு என்ற பெயரில்தான் இன்னும் படம் அறியப்படுகிறது.
மே 1 படம் வெளியாக இருக்கும் நிலையில் பிறரின் நிர்ப்பந்தத்தால் புறம்போக்கு என்ற பெயரை மாற்ற எஸ்.பி.ஜனநாதன் முடிவு செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் ஆகியோர் புறம்போக்கில் நடித்துள்ளனர்.

Leave a Reply