பென்சில் படத்தின் பாடல்கள்-டீசர் 19ம் தேதி வெளியீடு

பள்ளியில் நடக்கிற காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் பள்ளி மாணவனாக நடிக்கிறார். இப்படத்தின் காட்சிகளை ஜப்பான் உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கியுள்ளனர். விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசரை இம்மாதம் 19ம் தேதி வெளியிட உள்ளனர். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது. ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பும் அதிக அளவில் காணப்படுகிறது.