பென்சில் படத்தின் பாடல்கள்-டீசர் 19ம் தேதி வெளியீடு

b3e531c8-eea7-45d5-b912-62ed5284e1a9_S_secvpfஇசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘பென்சில்’. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், திருமுருகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார். மணி நாகராஜ் இயக்கி வருகிறார்.
பள்ளியில் நடக்கிற காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் பள்ளி மாணவனாக நடிக்கிறார். இப்படத்தின் காட்சிகளை ஜப்பான் உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கியுள்ளனர். விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசரை இம்மாதம் 19ம் தேதி வெளியிட உள்ளனர். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது. ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பும் அதிக அளவில் காணப்படுகிறது.

Leave a Reply